
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 11
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை இன்று நடக்கும் சூழலில், பாகிஸ்தான் அமைச்சர் போட்ட ஒரு போஸ்ட் சர்வதேச அளவில் அவர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.. இதற்கிடையே இஸ்ரேலை எனச் சாடி பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அந்த போஸ்ட்டை போட்ட போது அவர் மதுபோதையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்! வளைகுடா மோதல் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்தது. அமெரிக்காவில் இந்த போருக்கு எதிர்ப்புகள் அதிகரித்த சூழலில், டிரம்ப் போரை நிறுத்த பிரஷர் போட்டார். ஈரானும் இதற்கு ஒப்புக்கொண்டது. முதற்கட்டமாக 15 நாட்களுக்குப் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு இறுதிப் போர் நிறுத்த ஒப்பந்தம் போடுவதே திட்டமாகும்!
பேச்சுவார்த்தை இந்த விவகாரத்தில் அமெரிக்கா ஈரான் இடையே பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று இந்த அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இந்தச் சூழலில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தனது ‘X’ தளத்தில் இஸ்ரேலுக்கு எதிராக நேற்று பதிவிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது..எரிமலையாய் வெடித்த போஸ்ட் அதாவது லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டித்துப் பதிவிட்ட கவாஜா ஆசிப், “இஸ்ரேல் ஒரு தீய சக்தி மற்றும் மனிதக்குலத்திற்குப் பிடித்துள்ள சாபம்” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், “ஐரோப்பிய யூதர்களை வெளியேற்றுவதற்காகப் பாலஸ்தீன மண்ணில் இந்த நச்சுத்தன்மை வாய்ந்த நாட்டை உருவாக்கியவர்கள் நரகத்தில் எரிவார்கள்” என மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரை போனது. அவரது அலுவலகம் உடனடியாக இதற்குப் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் விமர்சித்த இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், “அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தும் ஒரு நாட்டின் அமைச்சரே, இஸ்ரேலை அடியோடு அழிக்க வேண்டும் எனப் பேசுவது அநாகரிகமானது.. இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது” எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. டெலிட் இஸ்ரேலின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, கவாஜா ஆசிப் தனது பதிவை அவசர அவசரமாக நீக்கினார். ஆனால் அதற்குள் அந்தப் பதிவு ஸ்கிரீன்ஷாட்களாகப் பகிரப்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் முனீர் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். அவர் ஆசீப்பை தொடர்பு கொண்டு திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சரை ஒரு பீல்ட் மார்ஷல் தொடர்பு கொண்டு அதிருப்தியை வெளிப்படும் அளவுக்குத் தான் அங்கு அரசின் பலம் உள்ளது என்பது தனிக்கதை!




















