
சென்னை: ஏப்ரல் 11-
தேசிய கல்விக் கொள்கையின்படி 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கையை 7 நாட்களில் செயல்படுத்த வேண்டுமென சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ இயக்குநர் பிரக்யா எம்.சிங், அனைத்து விதமான பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: 2026-27-ம் கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பில் இருந்து மும்மொழி திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.இதுவரை அமல்படுத்தாத மற்ற பள்ளிகளும், இந்த அறிவிப்பு வெளியான 7 நாட்களுக்குள் திட்டத்தை செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும். 3-வது மொழிகளுக்கான பாடப்புத்தகங்கள் விரைவில் கிடைக்கப்பெறும்.அதேநேரம் உள்ளூரில் கிடைக்கும் புத்தகங்கள், கற்பித்தல் வளங்களை பயன்படுத்தி 6-ம் வகுப்பில் இருந்து மும்மொழியை பள்ளிகள் கற்பிக்க வேண்டும்.
இதுதவிர பள்ளிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த மும்மொழி விவரங்களை இறுதிசெய்து, தகவல் தெரிவிக்க ேண்டும்.ஒரு பள்ளி 6-ம் வகுப்பில் எந்த 3-ம் மொழியை அறிமுகம் செய்கிறதோ, அதே மொழிதான் அந்த பள்ளிக்கான 9, 10-ம் வகுப்புகளில்
விருப்பப் பாடமாக இருக்கும். எனவே, அனைத்துப் பள்ளிகளும் மும்மொழி அமல் செய்வதை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது



















