Home செய்திகள் தேசிய செய்திகள் 16 பேர் எம்.பி.யாக பதவியேற்பு

16 பேர் எம்.பி.யாக பதவியேற்பு

புதுடெல்லி, ஏப்ரல் 17-
பாஜக தலை​வர் நிதின் நவீன், மத்​திய அமைச்​சர் ராம் நாத் தாக்​கூர், காங்​கிரஸ் மூத்த தலை​வர் அபிஷேக் சிங்வி உட்பட 16 பேர் மாநிலங்​களவை எம்​.பி.​யாக நேற்று பதவி ஏற்​றுக் கொண்​டனர்.
பிஹார், அசாம், ஹரி​யா​னா, இமாச்​சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்​றும் தெலங்​கானா மாநிலங்​களில் தேர்வு செய்​யப்​பட்ட மற்​றும் மீண்​டும் தேர்வு செய்​யப்​பட்ட 16 பேர் நேற்று மாநிலங்​களவை உறுப்​பினர்​களாக பதவி ஏற்​றுக் கொண்டனர். இவர்​களில் 8 பேர் பாஜக.வைச் சேர்ந்​தவர்​கள். 3 பேர் தே.ஜ. கூட்​ட​ணி​யைச் சேர்ந்​தவர்​கள். 5 பேர் காங்​கிரஸ் கட்சியைச் சேர்ந்​தவர்​கள்.
பிஹார் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்த நிதின் நவீன் பாஜக தேசிய தலை​வ​ரா​னார். அவர் தற்​போது மாநிலங்​களவை எம்​.பி.​யாக பதவி ஏற்​றுள்​ளார். மாநிலங்​களவைக்கு மீண்​டும் தேர்வு செய்​யப்​பட்ட மத்​திய அமைச்​சர் ராம் நாத் தாக்​கூரும் நேற்று பதவி ஏற்​றுக் கொண்​டார்.
இவர்​கள் தவிர உபேந்​திர குஷ்வா (ஆர்​எல்​எம்), ஷிவேஸ் குமார் (பாஜக), தெராஸ் கோவா​ரா(​பாஜக) உட்பட 16 பேர் மாநிலங்​களவை எம்​.பி.​யாக பொறுப்பேற்றனர். இவர்​களுக்கு மாநிலங்​களவை தலை​வர் சி.பி.​ரா​தா கிருஷ்ணன்​ பத​விப்​ பிர​மாணம்​ செய்​து வைத்​​தார்​.