Home செய்திகள் தேசிய செய்திகள் திமுக, காங்கிரஸ் சதிச் செயலை அனுமதிக்க மாட்டேன்: ஈரோட்டில் அமித்ஷா ஆவேசம்

திமுக, காங்கிரஸ் சதிச் செயலை அனுமதிக்க மாட்டேன்: ஈரோட்டில் அமித்ஷா ஆவேசம்

புதுடெல்லி: ஏப்ரல் 20
பெண்​களுக்கு அதிக தொகு​தி​கள் கிடைத்து விடக்​கூ​டாது என்ற குறுகிய மனப்​பான்​மை​யில் திமுக​வும் காங்​கிரசும் தடுக்​கின்​றன. இந்த சதிச்​செயலை நான் ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டேன் என மத்​திய அமைச்​சர் அமித்ஷா ஆவேச​மாகப் பேசி​னார்.
ஈரோடு மாவட்​டம் மொடக்​குறிச்சி தொகுதி பாஜக வேட்​பாள​ராக கிருத்​திகா போட்​டி​யிடு​கிறார். இவருக்கு வாக்கு சேகரிப்​ப​தற்​காக கோவை​யில் இருந்து தனி ஹெலி​காப்​டர் மூலம் ஈரோடு மாவட்​டம் சிவகிரிக்கு மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா நேற்று வந்​திருந்​தார்.
சின்​னி​யம்​பாளை​யத்​தில் அமைந்​துள்ள அரசு ஆரம்ப சுகா​தார மையம் அரு​கில் இருந்து பிரச்​சார வாக​னத்​தில், சிவகிரி கடைவீ​தி​யில் உள்ள தீரன் சின்​னமலை சிலை வரை ‘ரோடு ஷோ’​வில் பங்​கேற்று பாஜக வேட்​பாளர் கிருத்​தி​கா​வுக்கு வாக்கு சேகரித்​தார்​.
அப்​போது மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா பேசி​ய​தாவது: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் அமைந்​துள்ள என்​டிஏ கூட்​டணி வெற்​றிக் கூட்​ட​ணி​யாக அமைந்​துள்​ளது.
இக்​கூட்​டணி வெற்​றி​பெற்று ஆட்சி அமைத்​தால், திமுக ஆட்​சி​யில் நடை​பெற்ற ஊழல், கடத்​தல் ஒழிக்​கப்​படும். தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு மோச​மான நிலை​யில் உள்​ளது. அதி​முக ஆட்சி அமை​யும்​போது தமிழகத்​தின் இழந்த பெரு​மை​கள் எல்​லாம் மீட்டு எடுக்​கப்​படும்.முதல்​வர் ஸ்டா​லினின் ஒரே குறிக்​கோள் தனது மகனை முதல்​வ​ராக்க வேண்​டும் என்​பது​தான்.
இந்த குடும்ப ஆட்​சி​யால் தமிழகத்​துக்கு எந்த பயனும் இருக்​கப் போவ​தில்​லை.
தமிழக பெண்​கள் சுய​மாக அரசி​யலில் பங்​கெடுக்​கும் வகை​யில் மகளிர் மசோ​தாவை நாங்​கள் மக்​களவை​யில் கொண்​டு​வந்​தோம். அந்த மசோ​தாவை நிறைவேற்ற விடா​மல் திமுக​வும், காங்​கிரஸ் கட்​சி​யும் தடுக்​கின்​றன.கண்​டிப்​பாக இந்த மசோதா நிறைவேறும். தமிழக மக்​களுக்கு நன்மை கிடைக்​கும். இவ்வாறு அவர் பேசினார்.