Home செய்திகள் தேசிய செய்திகள் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,000

பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,000

கொல்கத்தா: ஏப்ரல் 20-
மேற்​கு​ வங்​கத்​தில் பாஜக ஆட்சி அமைத்​தால் பெண்​களுக்கு ஆண்​டு​தோறும் ரூ.36,000 வழங்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.
ஏப்.23, 29 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக மேற்கு வங்க சட்டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. தேர்​தலை​யொட்டி மேற்​கு ​வங்​கத்​தின் விஷ்ணுபூர், புருலி​யா, ஜார்​கி​ராம், மிதி​னாபூர் உள்​ளிட்ட பகு​தி​களில் பாஜக வேட்​பாளர்​களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று தீவிர பிரச்சாரம் செய்​தார்.
அப்​போது அவர் பேசி​ய​தாவது: பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்​யும் மசோ​தாவை திரிண​மூல் காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தோற்​கடித்​து​விட்​டன. பெண்​களுக்கு துரோகம் இழைத்த திரிண​மூல் கட்சிக்கு வரும் தேர்​தலில் பெண்கள் தகுந்த பாடம் கற்​பிப்​பார்​கள். மேற்​கு ​வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்​தால் பெண்களுக்கு ரூ.5 லட்​சம் வரை மருத்துவ காப்​பீடு வழங்​கப்​படும்.
பெண்​களின் குடும்​பத்​தில் யாருக்​காவது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் அவர்​களுக்கு அரசு மருத்​து​வ​மனை​களில் இலவச​மாக டயாலசிஸ் சிகிச்சை அளிக்​கப்​படும். மேற்​கு ​வங்க பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.3,000 உதவித் தொகை வழங்​கப்​படும். இதன்​படி ஆண்​டு​தோறும் பெண்​களுக்கு ரூ.36,000 வழங்​கப்​படும். மத்​திய அரசு சார்​பில் பெண்​களின் குழந்​தைப்​பேறுக்கு ரூ.21,000 அளிக்கப்​படும்.
பெண் குழந்​தைகளின் கல்விக்கு ரூ.50,000 வழங்​கப்​படும். பாஜக ஆட்சி அமைக்​கும்​போது மத்​திய அரசின் அனைத்து திட்​டங்​களும் அமல்​படுத்​தப்​படும். கடந்த 15 ஆண்​டு​களாக திரிண​மூல் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வரு​கிறது. ஆனால் மக்​களுக்கு எந்த பயனும் இல்​லை. கல்​வி, சுகா​தா​ரம், வேளாண்மை உள்​ளிட்ட துறை​களில் மாநிலம் மிக​வும் பின்​ தங்​கிய நிலை​யில் உள்​ளது. அரசின் அனைத்து துறை​களி​லும் ஊழல் வியாபித்து பரவி உள்ளது.