Home செய்திகள் தேசிய செய்திகள் தமிழக தேர்தல் திருப்பதியில் எதிரொலி

தமிழக தேர்தல் திருப்பதியில் எதிரொலி

திருப்பதி: ஏப்ரல் 24-
தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்தை விட சற்று குறைந்தே பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது.
நேற்று ஏழுமலையானை பக்தர்கள் 2 முதல் 3 மணி நேரத்துக்கு உள்ளாகவே தரிசனம் செய்து வெளியே வந்தனர்.
ஆனால், தமிழக தேர்தலையொட்டி மதுபான கடைகள் அடைக்கப்பட்டன.
இதனால் கடந்த 2 நாட்களாக தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, குப்பம், புத்தூர், நகரி, பிச்சாட்டூர், சத்யவேடு, பலமனேர், கார்வேட்டி நகரம் ஆகிய பகுதிகளில் தமிழகத்தில் இருந்து பைக்குகள், கார்களில் வந்து மது அருந்தியும், மதுபான பாட்டில்களை வாங்கியும் சென்றனர். இதனால் ஆந்திர எல்லைகளில் உள்ள மதுக்கடைகளில் 2 நாட்களாக கூட்டம் அலைமோதியது.