
திருப்பதி: ஏப்.24-
இந்து கடவுள்களை அவமானப்படுத்தி யார் பேசினாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி எச்சரித்துள்ளார். இவர் நடிகர் பிரகாஷ்ராஜ் மீதும் ரூ.100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்ந்துள்ளார்.
அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜகவின் ஆந்திர மாநில செய்தித் தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி, சமீபத்தில் ராமர், லட்சுமணர் பற்றி கேலியாக பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் மீது ரூ. 100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென ஆந்திர டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பானு பிரகாஷ் ரெட்டி கூறியதாவது: இந்து கடவுள்கள், இந்து கலாச்சாரங்களை கொச்சை படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பேசுவது பலருக்கு வாடிக்கையாகி விட்டது. அப்படி பேசுபவர்களின் பேச்சை இனி கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. சமீபத்தில் இந்து கடவுள்களை இழிவாகவும், கேலியும், கிண்டலுமாக பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் மீதும் ரூ.100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.


















