Home செய்திகள் தேசிய செய்திகள் பிஜேபியில் இணைந்த 7 எம்பிக்கள்

பிஜேபியில் இணைந்த 7 எம்பிக்கள்

டெல்லி: ஏப்ரல் 25 –
ஆம் ஆத்மி கட்​சி​யின் முக்​கி​யத் தலை​வர் ராகவ் சத்தா உள்​ளிட்ட 7 மாநிலங்​களவை எம்​.பி.க்​கள், அக்​கட்​சி​யில் இருந்து விலகி பாஜக​வில் இணைந்​துள்​ளனர். கட்சி ஒருங்கிணைப்​பாளர் அர்​விந்த் கேஜ்ரி​வால் மீதான அதிருப்​தி​யின் காரண​மாக அவர்​கள் இந்த முடிவை எடுத்​துள்​ளனர். இது ஆம் ஆத்மி கட்​சிக்கு பெரும் பின்​னடை​வாக கருதப்​படு​கிறது.
ஆம் ஆத்​மி கட்​சிக்கு மாநிலங்​களவை​யில் 10 எம்​.பி.க்​கள் உள்ளனர். கட்​சி​யின் முக்​கி​யத் தலை​வ​ரான ராகவ் சத்தா எம்​.பி., அக்​கட்​சி​யின் மாநிலங்​களவை துணைத் தலை​வ​ராக இருந்து வந்​தார். சமீபத்​தில் அந்த பொறுப்​பில் இருந்து அவர் நீக்​கப்​பட்​டு, அவருக்கு பதிலாக அசோக் மிட்​டல் நியமிக்​கப்​பட்​டார். இந்த சூழலில், கடந்த சில வாரங்​களாகவே, கட்​சித் தலை​மைக்​கும் ராகவ் சத்தாவுக்​கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்​தது. இந்நிலை​யில், அவர் அக்​கட்​சி​யில் இருந்து விலகி பாஜக​வில் இணைவ​தாக நேற்று அறி​வித்​தார். அவருடன், அக்​கட்​சியின் மேலும் 6 மாநிலங்​களவை எம்​.பி.க்​களும் பாஜக​வில் இணைவதாக அறி​வித்​துள்​ளனர்.
‘நேர்மை இல்​லாத கட்சி’: டெல்லியில் செய்​தி​யாளர்​களிடம் ராகவ் சத்தா நேற்று கூறிய​தாவது: ஆம் ஆத்மி கட்​சி​யின் மாநிலங்​களவை எம்​.பி.க்​களில் மூன்​றில் 2 பங்​கினர் பாஜக​வில் இணைய முடிவு செய்​துள்​ளோம். என்​னுடன் சேர்ந்து ஸ்வாதி மாலி​வால், ஹர்​பஜன் சிங், சந்​தீப் பதக், அசோக் மிட்​டல், ராஜேந்​தர் குப்​தா, விக்​ரம் சாஹ்னி என மொத்​தம் 7 எம்​.பி.க்​கள் ஆம் ஆத்மியில் இருந்து வெளி​யேறி உள்​ளோம். எனது வாழ்​வின் 15 ஆண்​டு​களை ஆம் ஆத்மி கட்​சி​யின் வளர்ச்​சிக்​காக அர்ப்​பணித்​தேன். ஆனால், நேர்​மை​யான அரசி​யலை முன்​னிறுத்தி தொடங்​கப்​பட்ட இந்த இயக்​கம், தற்​போது அந்த பாதை​யில் இருந்து வில​கி​விட்​டது. நியாய​மான மனித​னாகிய நான் தவறான, நேர்மை இல்​லாத ஒரு கட்​சி​யில் இருந்​ததை இப்​போது உணர்​கிறேன். எனவே, ஆம் ஆத்மி கட்​சி​யில் இருந்து விலகி மக்​களுக்​காகப் பணி​யாற்ற முடி​வெடுத்​துள்​ளேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.