Home மாவட்டங்கள் பெங்களூர் மாமல்லபுரம் சொகுசு ரெசார்ட்டில் தவெக எம்எல்ஏக்கள்

மாமல்லபுரம் சொகுசு ரெசார்ட்டில் தவெக எம்எல்ஏக்கள்

சென்னை: மே 6-
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சொகுசு ரெசார்ட் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று பகல் வரை இந்த இடத்தில் 50 எம்எல்ஏக்கள் இருப்பதை காண முடிந்தது மேலும் பல எம்எல்ஏக்கள் வந்த வண்ணம் உள்ளனர் இந்த இடத்தில் இருந்து ஆட்சி ஆட்சி அமைக்கும் பணியில் கட்சியின் தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இந்த ஓட்டலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது கட்சியின் முக்கிய தலைவர்கள் நிர்வாகிகள் எம்எல்ஏக்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக்கழகம் முதன்மையான கட்சியாக உள்ளது. எனவே ஆட்சி அமைக்க தீவிரமாக களம் இறங்கி உள்ளது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாமல் இருப்பது ஒரு ஏமாற்றமாக உள்ளது. எனவே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலது மற்றும் இடது கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர் தமிழக முதலமைச்சராக விஜய் அவர்கள் பதவி ஏற்கும் வரை இந்த ரெசார்ட் அரசியல் தொடரும் என்று தெரிகிறது. இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது இது நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட சொகுசு ரெசார்ட் ஹோட்டல் ஆகும்