Home செய்திகள் தேசிய செய்திகள் பள்ளிகள் ஆன்லைன் கிளாஸ் நடத்த பரிசீலிக்க வேண்டும் மோடி மீண்டும் அறிவுரை

பள்ளிகள் ஆன்லைன் கிளாஸ் நடத்த பரிசீலிக்க வேண்டும் மோடி மீண்டும் அறிவுரை

அகமதாபாத், மே 12- ஈரான் – அமெரிக்கா போரால் ஏற்பட்டு வரும் வரும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க பல்வேறு யோசனைகளை பிரதமர் மோடி முன்வைத்து வருகிறார். அந்த வகையில், கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் கிளாஸ் வழியில் மாணவர்களுக்கு கற்பித்தலை தொடங்கலாம் எனவும் நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் முறையை கொண்டு வரலாம் எனவும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். நேற்றும் கூட இதே போன்ற அறிவுறுத்தலை பிரதமர் மோடி கொடுத்து இருந்த நிலையில் இன்று மீண்டும் அதே விவகாரத்தை கையில் எடுத்து பேசியுள்ளார். மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு சுமார் 90 சதவீதம் அளவுக்கு இறக்குமதியையே சார்ந்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா போரால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு மோடி மீண்டும் அட்வைஸ் இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தல் விடுத்து வருகிறார். நேற்று தெலுங்கானாவில் நடைபெற்ற அரசு விழாவில் இந்த அட்வைஸை நாட்டு மக்களுக்கு மோடி வழங்கி இருந்தார்.
நாட்டு மக்களுக்கு மோடி மீண்டும் அட்வைஸ் இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தல் விடுத்து வருகிறார். நேற்று தெலுங்கானாவில் நடைபெற்ற அரசு விழாவில் இந்த அட்வைஸை நாட்டு மக்களுக்கு மோடி வழங்கி இருந்தார். நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- “கொரோனா பெருந்தொற்றில் தொடங்கிய உலகளாவிய நிலையற்ற சூழல் இன்னும் நீடித்து வருகிறது. தற்போது மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல்களால் அந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. நாட்டு மக்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால் பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்க வேண்டும்.
ஆன்லைன் வகுப்பு முறையை பின்பற்றலாம் மெட்ரோ ரயில், மின்சார பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். மேலும், கார்பூலிங்கை ஊக்குவிக்க வேண்டும். கார் வைத்திருப்பவர்கள் ஒரே வாகனத்தில் அதிகமானவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பம் தற்போது பல விஷயங்களை மிகவும் எளிதாக்கியுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவி நமக்கு மிகுந்த பயனளிக்கும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் முறைக்கு முன்னுரிமை வழங்கப்படுவது அவசியம். எரிபொருள் பயன்பாட்டை குறைத்து நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு ஆதரவு அளிக்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக கொரோனா காலத்தைப் போல ஆன்லைன் வகுப்பு முறையை பின்பற்றலாம்” என்று பேசினார்.