Home செய்திகள் தேசிய செய்திகள் மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்

மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்

புதுடெல்லி: மே 16 –
ஈரான் மற்​றும் ரஷ்​யா​விடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்க அமெரிக்கா அளித்த கெடு இன்​றுடன் முடிகிறது. இதுதொடர்​பாக காங்​கிரஸ் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:
இந்​தி​யா​வின் இறை​யாண்மை மற்​றும் எரிசக்​திப் பாது​காப்பை பிரதமர் மோடி தலை​மையி​லான அரசு சமரசம் செய்து கொண்​டுள்​ளது. நாட்​டின் எரிசக்​திப் பாது​காப்பு விவ​காரத்​தில் அமெரிக்கா​வுக்கு முன் மோடி அரசு பணிந்து போனதற்​கான விலை​யை, பெட்​ரோல், டீசல் மற்​றும் எரி​வாயு ஆகிய​வற்​றின் கடுமை​யான தட்​டுப்​பாடு​கள் வாயி​லாக ஒட்​டுமொத்த தேச​மும் இன்று கொடுத்​துக் கொண்​டிருக்​கிறது.முதலா​வ​தாக, அமெரிக்​கா​வின் தூண்​டு​தலின் பேரில், ரஷ்​யா​விட​மிருந்து மலிவு விலை​யில் கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை பிரதமர் மோடி அரசு நிறுத்​தி​யது. பின்​னர், போர் நடை​பெற்​றுக் கொண்​டிருந்த சூழலில், ரஷ்​யா​விட​மிருந்து எண்​ணெய் வாங்​கு​வதற்கு அமெரிக்​கா, இந்​தி​யா​வுக்கு ஒரு மாதம் விலக்கு அளித்​தது.இந்த விவ​காரத்​தில் நாட்​டின் நலனை முன்​னிறுத்​தித் தானே ஒரு முடிவை எடுப்​ப​தற்​குப் பதிலாக, பிரதமர் மோடி அரசு அமெரிக்க அதிபர் ட்ரம்​பிடம் பணிந்​து​போய், ரஷ்​யா​விட​மிருந்து எண்​ணெய் வாங்​கு​வதற்கு மீண்​டும் அனு​மதி கோரி கெஞ்​சிக் கொண்​டிருக்​கிறது. இது கண்​டிக்​கத்​தக்​கது. இவ்​வாறு காங்​கிரஸ்​ கட்​சி தெரி​வித்​துள்​ளது.