Home மாவட்டங்கள் பெங்களூர் தோல்வி குறித்து கள ஆய்வு -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

தோல்வி குறித்து கள ஆய்வு -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: மே 16 –
தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் திமுக குழுவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும், தனியாக சந்திக்க கூடாது என கூறினார்.திமுகவின் தோல்விக்கு உண்மையான காரணம் என்ன என்பதை அடிமட்ட தொண்டர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் கருத்துக்களை கேட்டு தெரியப்படுத்த வேண்டும். தொகுதி வாரியாக மாவட்ட வாரியாக மாநில அளவில் காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி மக்களுக்கு சேவை செய்து நற்பெயர் எடுத்து இருந்த நிலையில் இந்த தோல்வி எப்படி ஏற்பட்டது உண்மையில் மக்கள் வாக்களிக்க வில்லையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை கொடுக்குமாறு திமுக குழுவினருக்கு மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து உள்ளது இரண்டாம் இடத்தில் திமுகவும் மூன்றாம் இடத்தில் அதிமுகவும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது