Home மாவட்டங்கள் பெங்களூர் தமிழகத்தில் 27-ம் தேதி வரை கனமழை

தமிழகத்தில் 27-ம் தேதி வரை கனமழை

சென்னை: மே 22-
தமிழகத்​தில் சில மாவட்​டங்​களில் இன்று முதல் மே 27-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​ய​வும், சென்​னை, புறநகரில் இன்று வெப்ப அலை வீச​வும் வாய்ப்​பு உள்ளது.
இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய வங்​கக்​கடல் பகுதிகளி​லிருந்து தமிழகம் வரை தென்​மேற்கு வங்​கக்​கடல் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரத்​தில் ஒரு வளிமண்டல காற்​றழுத்த தாழ்வு பாதை நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (மே 22) ஓரிரு இடங்​களி​லும், 23, 24 தேதி​களில் ஒருசில இடங்​களி​லும், 25 முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.
தமிழகத்​தில் இன்று சேலம், தரு​மபுரி மற்​றும் கிருஷ்ணகிரி மாவட்டங்​களி​லும். 23-ம் தேதி திரு​வண்​ணா​மலை, திருச்​சி, சேலம், நாமக்​கல், வேலூர், திருப்​பத்​தூர் மற்​றும் தரு​மபுரி மாவட்டங்​களி​லும், 24-ம் தேதி கோவை மாவட்​டத்​தின் மலைப்பகுதி​கள், நீல​கிரி, வேலூர், ராணிப்​பேட்டை மற்​றும் திரு​வண்​ணா​மலை மாவட்​டங்​களி​லும். 25-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்​பகு​தி​கள், நீல​கிரி, தேனி, ஈரோடு மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும். 26-ம் தேதி கோவை மாவட்​டத்​தின் மலைப்​பகு​தி​கள், நீல​கிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம் மற்​றும் நாமக்​கல் மாவட்டங்​களி​லும், 27-ம் தேதி கோவை மாவட்​டத்​தின் மலைப்பகுதி​கள், நீல​கிரி, தேனி மற்​றும் திண்​டுக்​கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும்.
உள் தமிழக பகு​தி​களில் இன்று முதல் 24-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​க​மான அளவை ஒட்​டியே இருக்​கும். கடலோர தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்ச வெப்​பநிலை ஒருசில இடங்​களில் வழக்​கத்தை விட 7 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவை ஒட்டி இருக்​கக்​கூடும்.
சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் வெப்ப அலை வீசக்​கூடும். மாலை அல்​லது இரவு நேரங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.