Home மாவட்டங்கள் பெங்களூர் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

40 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: மே 30-
செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், மதுரை, திருச்​சி, கன்​னி​யாகுமரி, வேலூர், கள்​ளக்​குறிச்சி உள்​ளிட்ட மாவட்ட ஆட்​சி​யர்​கள் உட்பட 40 ஐஏஎஸ் அதி​காரி​கள் இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.
தமிழகத்​தில் புதிய முதல்​வ​ராக தவெக தலைவர் விஜய் பொறுப்​பேற்​றது முதல், பல்​வேறு துறை​களின் செயலர்​கள், ஐபிஎஸ் அதி​காரி​கள் தொடர்ந்து மாற்​றம் செய்​யப்​பட்டு வரு​கின்​றனர். அந்த வகை​யில், தமிழக நிதித்​துறை, பொதுப்​பணித்​துறை, ஊரக வளர்ச்​சி, நகராட்சி நிர்​வாகம் என பல்​வேறு துறை​களின் செயலர்​கள் மாற்​றப்​பட்​டு, புதிய அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இது தவிர, பல்​வேறு மாவட்​டங்​களின் ஆட்​சி​யர்​கள் மாற்​றப்​பட்​டுள்​ளனர். அந்த வகை​யில், நேற்று 40 ஐஏஎஸ் அதி​காரி​கள் ஒரே நாளில் பணி​யிட​ மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். குறிப்​பாக, காத்​திருப்பு பட்​டியலில் வைக்​கப்​பட்​டிருந்த அதி​காரி​கள் சிலருக்கு புதிய பணி​யிடம்​ வழங்​கப்​பட்​டுள்​ளது.