Home செய்திகள் தேசிய செய்திகள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்

சண்டிகர்: ஜூலை 1-
220 அடி ஆழமுள்ள ஆழ்​துளைக் கிணற்​றில் விழுந்த 4 வயது சிறு​வனை மீட்க தேசிய பேரிடர் மீட்​புப் படை​யினர் களத்தில் இறங்​கி​யுள்​ளனர்.ஹரி​யானா மாநிலம் அம்​பாலா மாவட்​டம் தனவுரா கிராமத்​தைச் சேர்ந்த சிறு​வன் நிர்​பய் (4). நேற்று அதி​காலை சிறு​வன் நிர்​பய், தனது தந்தை மஞ்​சித்​துடன் வயலுக்​குச் சென்​றார்.
அப்​போது மஞ்சித் சாப்​பிடு​வற்​காக மகனை அங்​கேயே விட்​டு​விட்டு வீட்டுக்குச் சென்​றார். அப்​போது அங்கு தோண்​டப்​பட்​டிருந்த 220 அடி ஆழ ஆழ்​துளைக் கிணற்​றுக்கு அருகே விளை​யாடிக் கொண்டிருந்த நிர்​பய் தவறி குழிக்​குள் விழுந்​து​விட்​டான்.
இதைப் பார்த்த நிர்​ப​யின் தாத்தா கர்​னா​யில் சிங், சம்பவ இடத்துக்கு ஓடி வந்து கிராம மக்​களை உதவிக்கு அழைத்​தார். இதையடுத்து போலீ​ஸாருக்​கும், தீயணைப்​புப் படை​யினருக்​கும் தகவல் தரப்​பட்​டது.
தீயணைப்​புப் படை​யினர் விரைந்து வந்து ஆய்வு செய்த பின்​னர் தேசிய பேரிடர் மீட்​புப் படை​யினருக்​கும் (என்​டிஆர்​எஃப்), மாநில பேரிடர் மீட்​புப் படை​யினருக்​கும் (எஸ்​டிஆர்​எஃப்) தகவல் தெரி​வித்​தனர்.
என்​டிஆர்​எஃப் படை​யினர் விரைந்து வந்து மீட்​புப் பணி​யைத் தொடங்​கி​யுள்​ளனர். இதைத் தொடர்ந்து ராணுவத்​தைச் சேர்ந்த ஒரு குழு​வும் என்​டிஆர்​எஃப் குழு​வுக்கு உதவும் பணிக்​காக வந்துள்ளது. மாவட்ட ஆட்​சி​யர் அஜய் சிங் தோமர், மீட்​புப் பணி நடை​பெறும் இடத்​துக்கு வந்து ஆய்வு செய்​தார்.
சிறு​வன் விழுந்த ஆழ்​துளை கிணற்​றுக்கு அருகே பள்​ளம் வெட்டி சிறு​வனை மீட்க முயற்​சிகள்​ நடை​பெற்​று வரு​கின்​றன. இரவு வரை மீட்​புப்​ பணிகள்​ நடை​பெற்​றன.