Home செய்திகள் தேசிய செய்திகள் கூட்​டுறவு ஆயுள் காப்​பீடு நிறுவனம் தொடங்​கப்படும்: அமித் ஷா அறிவிப்பு

கூட்​டுறவு ஆயுள் காப்​பீடு நிறுவனம் தொடங்​கப்படும்: அமித் ஷா அறிவிப்பு

புதுடெல்லி: ஜூலை 7-
பாரத் டாக்ஸி சேவையை உரு​வாக்​கியது போல் கூட்டுறவு ஆயுள் காப்​பீடு நிறு​வனத்தை மத்​திய அரசு தொடங்​கும் என மத்​திய கூட்​டுறவுத்​துறை அமைச்​சர் அமித் ஷா கூறி​னார்.
பாரத் டாக்ஸி சேவை திட்​டத்தை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கி வைத்​தார். இது நாட்​டின் முதல் கூட்​டுறவு அடிப்​படையி​லான டாக்ஸி சேவை​யாகும். இந்​நிலை​யில் மத்​திய கூட்​டுறவு அமைச்​சகத்​தின் 5-ம் ஆண்டு விழா நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதை முன்​னிட்டு டெல்​லி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின் முதல் கூட்​டுறவு அடிப்​படையி​லான டாக்ஸி சேவை ‘பாரத் டாக்​ஸி’ சேவை​யாகும்.
அதே முறையை பின்​பற்​றி, மத்​திய அரசு விரை​வில் ஒரு கூட்​டுறவு ஆயுள் காப்​பீட்டு நிறு​வனத்​தை​யும், ஒரு பொதுப்​பயன்​பாட்டு கூட்​டுறவு அமைப்​பை​யும் தொடங்​கும். இஃப்​கோ-டோக்​கியோ காப்​பீடு மாதிரி​யின் வெற்​றியைத் தொடர்ந்​து, கூட்​டுறவு ஆயுள் காப்​பீட்டு நிறு​வனத்​தை​யும் நிறுவ உள்​ளோம். இது காப்​பீட்​டுத் துறை​யில் கூட்​டுறவுப் பிரிவை கணிச​மாக முன்​னேற்​றும். தற்​போது விவ​சாயக் கடனில் சுமார் 20%, உர விநி​யோகத்​தில் 35%, சர்க்​கரை உற்​பத்​தி​யில் 21%, பால் உற்​பத்​தி​யில் 35% கூட்​டுறவு சங்​கங்​களின் பங்​களிப்​பாக உள்​ளன. பாரத் டாக்ஸி சேவை, அடுத்த இரண்டு ஆண்​டு​களில் ஒவ்​வொரு மாநிலத்​தி​லும், 500 நகரங்​களி​லும் கிடைக்​கும். கூட்​டுறவு அமைச்​சகம் 2021-ம் ஆண்டு உரு​வாக்​கப்​படு​வதற்கு முன்​பு, வேளாண் அமைச்​சகத்​தின் ஒரு அங்கமாக இருந்தது.
அரசி​யலமைப்பு சட்​டத்​தின் படி, கூட்​டுறவு என்​பது மாநிலப் பட்டியலின் கீழ் வரும். கூட்​டுறவுத்​ துறை அமைச்​சகம் உருவாக்கப்​பட்டு 5 ஆண்​டு​கள் கடந்​து​விட்​டன. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்​கள் கூட கூட்​டுறவு அமைப்புகளில் மத்​திய அரசு தலை​யிடு​வ​தாக எந்​தப் புகாரும் தெரிவிக்​க​வில்​லை. இவ்​வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.