Home செய்திகள் தேசிய செய்திகள் பல இடங்களில் தென்மேற்கு பருவமழை: புனேயில் 3 பேர் பலி

பல இடங்களில் தென்மேற்கு பருவமழை: புனேயில் 3 பேர் பலி

புதுடெல்லி: ஜூலை 7-
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பெய்த மழையின் காரணமாக, பல்வேறு விபத்துகளில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தலைநகர் மும்பையிலும் விடிய விடிய கொட்டிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால், உள்ளூர் ரயில் சேவைகள் மற்றும் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தன. அலுவலகம் செல்வோர் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதேபோல், இமாச்சலப் பிரதேசத்திலும் கனமழைக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கும், அதைத்தொடர்ந்து பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மழை பாதிப்புகள் குறித்து பேரிடர் மீட்புக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.