Home மாவட்டங்கள் பெங்களூர் கர்நாடகத்தில் கனமழை – பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை

கர்நாடகத்தில் கனமழை – பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை

பெங்களூரு: ஜூலை 7-
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, மலேநாடு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தர கன்னடா, சிவமொக்கா, சிக்மகளூரு, பெலகாவி, குடகு, ஹாசன் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று அதிரடியாக விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
உத்தர கன்னடா மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடிகள், பள்ளிகள் மற்றும் பி.யு. கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா விடுமுறை அறிவித்துள்ளார்.
பெலகாவி மற்றும் கானாப்பூர் தாலுகாக்களின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள அங்கன்வாடிகள், ஆரம்ப, உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பி.யு. கல்லூரிகளுக்கு (12-ஆம் வகுப்பு வரை) மாவட்ட ஆட்சியர் முகமது விடுமுறை அளித்துள்ளார். கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.