Home செய்திகள் தேசிய செய்திகள் அயோத்தி ராமர் கோவில் பணம் முறைகேடுவிசாரணை தீவிரம்

அயோத்தி ராமர் கோவில் பணம் முறைகேடுவிசாரணை தீவிரம்

அயோத்தி: ஜூலை 7-
உலகமே வியந்து பார்த்த அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிலும் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த விழாவிற்காக ரூ.124 கோடிக்கும் அதிகமாகச் செலவிடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதில் பெரும் தொகையைக் கையாடல் செய்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே ராமர் கோவில் நன்கொடைப் பணத்தைத் திருடியது தொடர்பான விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது கும்பாபிஷேக விழா செலவிலும் ஊழல் நடந்திருப்பது குறித்து அதிகாரிகள் ஆவணங்களை அதிரடியாகச் சோதித்து, விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.