அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி2 சதவீதம் உயர்வு

சென்னை: , ஏப் 28- அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது; பண்டிகை கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தப்படுகிறது. சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசுத் தொகை ரூ.1,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பலன் பெறும் திட்டம் இந்தாண்டே அமல்படுத்தப்படும்.பழைய ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்துவது குறித்து ஆராய்ந்து செப்டம்பரில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சம், கலை அறிவியலுக்கு ரூ.50,000 முன்பணம் வழங்கப்படும்.பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெற மகப்பேறு விடுப்பு காலமும் இனி தகுதிக்கான காலமாக எடுத்துக் கொள்ளப்படும் என அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 9 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.