ஒமர் அப்துல்லா மகிழ்ச்சி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் 2025-ம் ஆண்டுக்கான சுற்றுலா கண்காட்சியை ஜம்மு காஷ்மீர் முதல்​வர் ஒமர் அப்​துல்லா நேற்று தொடங்கி வைத்தார்.இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: 2025-ம் ஆண்டு எங்​களுக்கு எளி​தான ஆண்டு அல்ல. இந்த ஆண்டை பஹல்​காம் தாக்​குதலுக்கு முன்பு மற்​றும் பின்பு என 2 பகு​தி​களாகப் பிரிக்​கலாம். பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு ஜம்​மு-​காஷ்மீரில் தற்​போது சுற்​றுலா மீண்​டும் எழுச்சி பெற்று வரு​கிறது. மேற்கு வங்க மக்​கள் ஜம்மு காஷ்மீருக்கு ஆதர​வாக உள்​ளனர். இரு பிராந்​தி​யங்​களுக்​கும் இடையி​லான உறவு நம்​பிக்கை மற்​றும் பாசத்​தின் அடிப்​படையி​லானது.
ஜம்மு காஷ்மீரில் சுற்​றுலாப் பயணி​களின் பாது​காப்​புக்கு தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்​டுள்​ளன.இதனை சமீபத்​தில் பஹல்​காமில் இருந்து திரும்​பிய பயணி​கள் மூலம் நீங்​கள் அறிய​லாம். காஷ்மீரில் தற்​போது அமர்​நாத் யாத்​திரை நடை​பெற்று வரு​கிறது. இதனால் நேரடி விமான சேவை அதி​கரிக்​கப்​பட்​டு உள்​ளது.