ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

மைசூர், பிப்ரவரி 17 –
பண பிரச்சினை காரணமாக ஒரு குடும்பமே தூக்கில் தொங்கிய பரிதாப சம்பவம் கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்துள்ளது.தாய் மகன் மருமகள் பேரன் ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டது.
மைசூர் மாவட்டம்
வித்யாரண்யபுரம், விஸ்வேஸ்வரய்யா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சேத்தன் (45), ரூபாலி (43), பிரியம்வதா (62) குஷால் (15) ஆகியோர் உயிரிழந்தனர்.
3 பேருக்கு விஷம் கொடுத்துவிட்டு, சேத்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மைசூர் போலீஸ் கமிஷனர் சீமா லட்கர், டிசிபி ஜாஹ்னவி, வித்யாரண்யபுரம் இன்ஸ்பெக்டர் மோஹித் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வழக்கு தொடர்பாக மைசூர் காவல் ஆணையர் சீமா லட்கர் கூறும்போது சேதனின் குடும்பத்தினர் மற்றும் சேதன் அம்மா பிரியம்வதா பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வந்தனர். . தாய் பிரியம்வதா மற்றும் மகன் சேதனின் குடும்பத்தினர் நேற்று ஒன்றாக கோரூரிக்குச் சென்று உள்ளனர. கோரூர் கோவிலுக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார்.இந்த நிலையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது இறந்த சேத்தன் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கோரூரை சேர்ந்தவர்.. சேத்தனின் மனைவி ரூபாலி மைசூரைச் சேர்ந்தவர். சேதனும் ரூபாலியும் 2019 முதல் மைசூரில் வசித்து வருகின்றனர். சேதன் சவுதி அரேபியாவிற்கு தொழிலாளர்களை அனுப்பும் பணி செய்து வந்தார்.நீண்ட நிலையில் இவர்கள் குடும்பம் உயிரிழந்து உள்ளது. இது தொடர்பாக வித்யாரண்யபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சேத்தன் ஒரு மரணக் குறிப்பை எழுதினார். நமது மரணத்திற்கு நாங்களே பொறுப்பு. நாங்கள் பணப் பிரச்சினையால் பல்வேறு சங்கடங்களை சந்தித்து வந்தோம்.எனவே இந்த உலகத்தை விட்டு செல்கிறோம்.எங்கள் சாவுக்கு யாரும் காரணம் அல்ல எங்களை மன்னித்து விடுங்கள்.என்று மரண குறிப்பு எழுதி வைத்து உள்ளார் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரண குறிப்பில் பண பிரச்சனை என்று எழுதப்பட்டுள்ளது பண பிரச்சினை என்றால் என்ன? கடன் தொல்லையா? யாராவது நெருக்கடி கொடுத்தார்களா? தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதா? இந்த உலகத்தை விட்டு இவர்கள் செல்ல உண்மையான காரணம் என்ன என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்