ஒரே நாடு, ஒரே தேர்தல்

புதுடெல்லி: ஜனவரி. 24 – ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவாக 81 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய சட்ட அமைச்சகம் கடந்த 2023 செப்டம்பரில் அமைத்தது.
இதையடுத்து, ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கடந்த 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பேரில், நாடு முழுவதிலும் இருந்து 20,972 பேர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதில், ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும் நடத்துவதற்கு ஆதரவாக 81 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்குமாறு 46 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதுவரை17 கட்சிகள் பரிந்துரை அளித்துள்ளன.