பெங்களூரு: டிச. 14:
பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய அதுல் சுபாஷ் (34) கடந்த 16-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு, 24 பக்கங்களில் தற்கொலைக்கான காரணத்தை விவரிக்கும் கடிதமும், 90 நிமிடங்கள் அவர் பேசும் வீடியோவையும் வெளியிட்டார்.
அதில் தன் மனைவி நிகிதா சிங்காரியாவுடனான விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சமாக ரூ.3.3 கோடி கேட்டு துன்புறுத்தியது, தன் 3 வயது மகனை காண்பிக்காமல் பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.40 ஆயிரம் கோரியது, பொய் வழக்குகளை தொடுத்து தொல்லை கொடுத்தது, வழக்கை தீர்க்க நீதிபதி ரீட்டா கவுசிக் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டது ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். இந் நிலையில் மறைந்த அதுல் சுபாஷின் சகோதரர் விகாஷ், நிகிதா சிங்காரியா, அவரது தாய், சகோதரர் ஆகியோருக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து மாரத்தஹள்ளி போலீஸார் நிகிதா சிங்காரியா, அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் 3 நாட்களுக்குள் விசா
ரணை அதிகாரி முன் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.