கேரள செவிலியரை காப்பாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு

புதுடெல்லி: ஜூலை 11-
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது தொழில் பங்குதாரரான ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையின் முடிவில் நிமிஷா பிரியாவுக்கு 2020-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது இறுதி மேல்முறையீடும் 2023-ல் நிராகரிக்கப்பட்டது.தற்போது ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16-ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது.இந்த நிலை​யில் அவருக்கு சட்​டப்​பூர்​வ​மாக உதவ சர்​வ​தேச நடவடிக்கை கவுன்​சில் என்ற அமைப்பு சார்​பில் வழக்​கறிஞர் சுபாஷ் சந்​திரன் உச்ச நீதி மன்​றத்​தில் நேற்று ஆஜரா​னார். அப்​போது, நிமிஷா பிரி​யாவை காப்​பாற்​று​வதற்​கான ராஜதந்​திர வழிகளை மத்​திய அரசு விரைந்து ஆராய வேண் டும் என்று உச்​சநீ​தி​மன்​றத்​தில் அவர் தெரி​வித்​தார்.
இதையடுத்​து, நீதிப​தி​கள் சுதன்ஷு துலியா மற்​றும் ஜாய்​மல்யா பக்சி ஆகியோர் அடங்​கிய அமர்வு இந்த வழக்கை ஜூலை 14-ம் தேதி விசா ரணைக்கு பட்​டியலிட்​டது. ஷரி​யத் சட்​டத்​தின் கீழ் இறந்​தவரின் குடும்​பத்​துக்கு இழப்பீடு (பிளட் மணி) செலுத்​து​வதன் மூலம் குற்​ற​வாளி மன்​னிக்​கப்​படலாம்.இந்த முறையை பின்​பற்றி கேரள செவிலியரை மீட்க மத்​திய அரசு சார்​பில் நடவடிக்கை எடுக்​கும்​படி வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பான மனுவை அட்​டர்னி ஜெனரலுக்கு அனுப்பி அவரின் உதவியை கோரு​மாறு வழக்​கறிஞரிடம் உச்ச நீதி​மன்​ற அமர்​வு அறி​வுறுத்​தியது.