சங்கிலி தொடர் விபத்து – ஒருவர் பலி இருவர் காயம்

பெங்களூர்: ஆகஸ்ட். 22 – பொலேரோ வாகனம் கேன்டர் வாகனத்தின் மீது மோதியதில் ஏற்பட்ட தொடர் விபத்தில் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்திருப்பதுடன் இரண்டு பேர் பலத்த காயங்களடைந்துள்ள சம்பவம் நகரின் எலெக்ட்ரானிக் சிட்டியின் கோணப்பன அக்ராஹாராவில் மேம்பாலத்தில் நடந்துள்ளது. போலெரோ வாகனத்தின் மீது வேகமாக வந்த கேன்டர் வாகனம் மோதியுள்ளது. இந்த மோதலால் கெண்டார் வாகனம் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இதில் சிக்கிக்கொண்ட கெண்டார் வாக ஓட்டுநர் மன்சூர் என்பவர் அதே இடத்தில் நசுங்கி உயிரிழந்துள்ளார். பலத்த காயங்களடைந்த ஓருவரும் மற்றும் போலெரோ வாகன ஓட்டுநர் ஹரீஷ் ஆகியோர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சேர்த்துள்ள நிலையில் இரண்டு பேர் நிலையம் கவலைக்கிடமாயுள்ள்ளது. இந்த தொடர் விபத்து குறித்து காட்சிகள் அருகில் உள்ள சி சி டி வி காமிராக்களில் பதிவாகியுள்ளது. இந்த தொடரவிபத்தால் மேம்பாலத்தில் நீண்ட நேரம் வாகன போக்குவரத்து தடை பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமங்களுக்கு ஆளாயினர். எலெக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்தில் ஈடுபட்ட வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு வழி செய்து கொடுத்தனர்.