
நாகப்பட்டினம், ஜூலை 8-
நாகையில், பிரசித்தி பெற்ற அமிர்தவல்லி சமேத சட்டநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருச்செந்துார் முருகனுக்கு அரோகரா., கும்பாபிஷேகம் காண கடலாக விரிந்த பக்தர்கள் நாகையில் 3,000 ஆண்டுகள் பழமையான, கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட பிரதித்தி பெற்ற அமிர்தவல்லி அம்பாள் சமேத சட்டநாத சுவாமி மாடக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேக பூஜைகள், கடந்த 2ம் தேதி துவங்கின. நேற்று, யாகசாலை ஆறாம் கால பூஜைகளுக்கு பின் கடங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, அனைத்து விமான கோபுரம், ராஜ கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.