தங்கம் விலை உயர்வு

சென்னை: மார்ச் 4-
சென்னையில் இன்று (மார்ச் 4) சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் ஆபரணட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 உயர்த்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஜன.31-ம் தேதி ஒரு பவுன் ஆபணத்தங்கம் ரூ.61 ஆயிரத்தையும், பிப்.1-ம் தேதி ரூ.62 ஆயிரத்தையும் தாண்டியது. நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுவந்தது.
அதிலும், பிப்.11-ம் தேதி பவுன் தங்கம் ரூ.64,480 ஆகவும், பிப்.20-ம் தேதி ரூ.64,560 ஆகவும் உயர்ந்தது. இதன் பிறகு, சற்று விலை குறைந்தாலும், பிப்.25-ம் தேதி பவுன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை பதவு செய்து வந்தது. இதற்கிடையில் பிப்.26 தொடங்கி மூன்று நாட்கள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1000 வரை குறைந்தது.