தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 அதிரடியாக உயர்ந்தது. இந்த தொடர் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு 9ம் தேதி தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் அதிகரித்து இருந்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,365க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,920க்கும் விற்கப்பட்டது.நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து கிராம் ரூ.5380க்கும் சவரன் ரூ.43,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.304 உயர்ந்து சவரன் ரூ.43,280க்கும், கிராம் ரூ.5,410க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.75.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.