தமால் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு

புதுடெல்லி: ஜூலை 3-
ரஷ்​யா​வின் கலினின்​கிரட் பகு​தி​யில் உள்ள யாந்​தர் கப்​பல் கட்​டும் தளத்​தில் நடை​பெற்ற விழா​வில் ஐஎன்​எஸ் தமால் என்ற புதிய போர்க்​கப்​பல் இந்​திய கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டது. இந்​திய கடற்படை பயன்​பாட்​டுக்​காக போர்க்​கப்​பல்​கள் உள்​நாட்​டிலும், ரஷ்​யா​வில் தயாரிக்​கப்​படு​கின்​றன.எதிரி நாட்டு ரேடாரில் சிக்​காத துஷில் ரக போர்க்​கப்​பல்​களை ரஷ்​யா​வில் தயாரிக்க, இந்​திய பாது​காப்​புத்​துறை ஆர்​டர் கொடுத்​தது. இதில் பிரம்​மோஸ் ஏவு​கணை​கள் உட்பட 26 சதவீதம் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட பாகங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன.
இந்த கப்​பல் ரஷ்​யா​வின் கலினின்​கிரட் பகு​தி​யில் உள்ள யாந்​தர் கப்​பல் கட்​டும் தளத்​தில் இந்​திய கடற்​படை​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. அதன்​பின் இந்த இந்த போர்க்​கப்​பலை இந்​திய கடற்​படை​யில் இணைக்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது.
இந்​திய கடற்​படை​யின் மேற்கு மண்டல தலைமை அதி​காரி வைஸ் அட்​மிரல் சஞ்​சய் ஜஸ்​ஜித் முன்​னிலை​யில் ஐஎன்​எஸ் தமால் கடற்​படை​யில் இணைந்​தது. இதில் இந்​திய பாது​காப்​புத்​துறை, கடற்​படை மற்​றும் ரஷ்ய கடற்​படை அதி​காரி​கள் பங்​கேற்​றனர்.
, எதிரி நாட்டு ரேடாரில் சிக்​காத வகை​யில் தயாரிக்​கப்​பட்ட 8 போர்க்​கப்​பல் ஐஎன்​எஸ் தமால் ஆகும். துஷில் ரக கப்​பலில் இது 2-வது கப்​பல். முதல் துஷில் ரக கப்​பல் ஐஎன்​எஸ் துஷில் என்ற பெயரில் கடந்த ஆண்டு டிசம்​பர் 9-ம் தேதி கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டது.