தமிழகத்தில் கனமழை

சென்னை செப்.24- தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.இதுதவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதே போன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.