Home தலைப்பு செய்தி தமிழகத்தில் விஜய் புரட்சி

தமிழகத்தில் விஜய் புரட்சி

சென்னை: ஜூன் 18-
ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தமிழ்நாட்டில் விஜய் புதிய புரட்சியை ஏற்படுத்தியதாக கவர்னர் புகழாரம் சூட்டினார் மேலும் ஜாதி மதம் பார்க்காமல் விஜய் கட்சியின் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்து புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்து உள்ளனர் என்றும் இது முதல்வர் விஜய் அவர்களின் பெரும் சாதனை என்றும் கவர்னர் கூறினார்
தமிழகத்​தின் 17-வது சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் ஆர்​.​வி. அர்​லேகர் தலை​மை​யில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இதில் உரையாற்றிய ஆளுநர் அர்லேகர், தமிழக அரசின் உரையை அப்படியே வாசித்தார். மக்களின் பெரும் ஆதரவோடு தவெக ஆட்சி அமைந்ததுள்ளது என்றும் தமிழகத்தில் அரசியல் வரலாற்று புரட்சி நடைபெற்று இருப்பதாகவும் கூறினார்.
ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து பணம் கொடுக்காமல் பொதுமக்களின் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளதாக ஆளுநர் அர்லேகர் சட்டசபையில் தெரிவித்தார். மேலும், கடந்த 74 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் அரசு செயல்படும் என்றும் தனது உரையில் உறுதியளித்தார்.
தமிழகத்தில் 17வது சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று கூடியது. தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று ஆளுநர் அர்லேக்கர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் அர்லேகர் கூறியதாவது:-
ஜாதி, மதங்களை கடந்து பணம் கொடுக்காமல் தவெகவை மக்கள் தேர்வு செய்துள்ளனர். கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் பொதுமக்களின் ஆதரவோடு தவெக ஆட்சியை பிடித்துள்ளது. தனி ஒருவராக வரலாற்று புரட்சியை விஜய் நிகழ்த்தி காட்டியுள்ளார். ஜனநாயகத்தின் மக்கள்தான் நாயகர்கள் என்று அண்ணா கூறினார். எம்.ஜி.ஆர் போல விஜய் புரட்சி ஏற்படுத்தியுள்ளார். வரலாற்று புரட்சி நடந்துள்ளது மக்களின் பெரும் ஆதரவோடு தவெக ஆட்சி அமைந்துள்ளது. 1967 ல் அண்ணா, 1977ல் எம்.ஜி.ஆருக்கு பிறகு 2026ல் வரலாற்று புரட்சி நடைபெற்றுள்ளது. விசில் புரட்சி மூலம் இமயமலை அளவுக்கு வெற்றியை விஜய் பதிவு செய்துள்ளார். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் ஆட்சி இருக்கும். 74 ஆண்டுகளில் பார்க்காத அளவுக்குக் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இந்த முறை பங்கு அளிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் நனல் சர்ந்த விவாதங்கள் சட்டப்பேரவையில் ந்டைபெறும் என நம்புகிறேன். தமிழக்த்தின் கடன் 10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. தமிழகத்தின் நிதி நிலைமை கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் மோசமாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. தவெக அரசு அமைந்ததும் தமிழகத்தில் 717 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே தொடரும் அமைதியான , பாதுகாப்பான தமிழகம் என்ற அடிப்படையில் அரசு செயல்படுகிறது. அரசு டெண்டர்கள் வெளிப்படைத்தன்மையுடன் கண்காணிக்கப்பட உள்ளன. அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் வெளியே செல்வது தடுக்கப்படும். தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே தொடரும்” என்றார். இந்தியாவின் முன் மாதிரி மாநிலமாக தமிழ்நாடு மாறும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண்கள் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு செய்தவுடன் தமிழக அரசு சமூக நீதி சர்வே நடத்தும். தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பியே இருக்கின்றனர். உச்ச நீதிமன்றம் உத்தாவிட்டும், காவிரியில் உபரி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிடுகிறது. மேகதாது திட்டத்தை நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் எளிமைபப்டுத்தப்படும். 2031ல் இந்தியாவின் முன் மாதிரி மாநிலமாக தமிழ்நாடு மாறும்.