திருடப்படும் செல்போன்கள்

புதுடெல்லி: மே 29 –
​நாடு முழு​வதும் பல்​வேறு இடங்​களில் திருடப்​படும் செல்​போன்​கள், கண்​டறியப்​பட்டு வெற்​றிகர​மாக உரியவர்களிடம் சேர்க்​கப்​படும் தகவல் தற்​போது தெரிய​வந்​துள்​ளது. இதற்​காக போலீ​ஸார் உதவி​யுடன் மத்​திய அரசு நடத்​தும் இணை​யதளம் உதவி வரு​கிறது. நாடு முழு​வதும் கோடிக்​கணக்​கான மக்​கள் செல்​போன்​களை பயன்​படுத்தி வரு​கின்​றனர்.இதில் பலர் தங்​களது செல்​போன்​களை தவற​விடு​கின்​றனர். மேலும் சிலர், திருடர்​களிடம் தங்​களது செல்​போன்​களை பறி​கொடுக்​கின்​றனர். அதே​நேரத்​தில் திருடப்​படும் செல்​போன்​கள் குறித்து போலீஸ் நிலை​யங்​களுக்கு வரும் புகார்​கள் குறை​வாகவே உள்​ளன. இருந்​த​போதும் புகார் தரப்​பட்ட செல்​போன் திருட்​டு​கள் குறித்து போலீ​ஸார் தீவிர​மாக விசா​ரித்து அவற்​றைக் கண்​டறிந்து வரு​கின்​றனர்.
அண்​மை​யில் உத்​தர பிரதேச மாநிலம் காஸி​யா​பாத் போலீஸ் நிலை​யத்​துக்கு 70-க்​கும் மேற்​பட்ட செல்​போன் பார்​சல்​கள் வந்​துள்​ளன. இவை அனைத்​தும் திருடப்​பட்டு வெவ்​வேறு மாநிலங்​களில் உள்ள கள்​ளச்​சந்​தைகளில் விற்​கப்​பட்​ட​வை. இவ்​வாறு கள்​ளச்​சந்​தைகளில் விற்​கப்​படும் செல்​போன்​களை தெரி​யாமல் வாங்​கும் நபர்​கள், அதன் உண்​மைத்​தன்​மையை அறிந்து அவற்றை போலீ​ஸார் உதவி​யுடன், சம்​பந்​தப்​பட்ட போலீஸ் நிலை​யங்​களுக்கு திருப்பி அனுப்பி வரு​கின்​றனர்.
6 மாதங்​களுக்கு முன் காஷ்மீரின் புல்​வா​மாவைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒரு​வர், மிகக்​குறைந்த விலை​யில் ஒரு கடை​யில் செல்​போனை வாங்​கி​யுள்​ளார். அப்​போது​தான் அந்த செல்​போன் உ.பி. மாநிலம் காஸி​யா​பாத்​தி​லுள்ள ரஞ்​சித் ஜா என்ற சாஃப்ட்​வேர் இன்​ஜினீயருக்கு சொந்​த​மானது என்​பது தெரிய​வந்​தது. ரஞ்​சித் ஜா அந்த செல்​போனை கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 16-ம் தேதி தவற​விட்​டுள்​ளார். இதுதொடர்​பாக அவர் போலீ​ஸில் புகார் கொடுத்​துள்​ளார்.இதுகுறித்து ரஞ்​சித் ஜா கூறும்​போது, “நான் ஒரு நேர்​முகத் தேர்​வுக்​குத் தயா​ராகி​விட்டு மெட்ரோ ரயில் நிலை​யத்​துக்கு ஆட்​டோ​வில் சென்​றேன். அப்​போது போன் பேசி​விட்டு போனை தவறு​தலாக கையி​லிருந்து நழுவ விட்​டு​விட்​டேன். பின்​னர் செல்​போனை தவற​விட்​டதை அறிந்து போலீஸ் நிலை​யத்​தில் புகார் கொடுத்​தேன். இப்​போது எனது போன் திரும்​பக் கிடைத்​துள்​ளது’’ என்​றார்.