திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறையாததால் வி.ஐ.பி தரிசனம்

திருப்பதி, ஜூன்.9 ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் உள்ளது. கடந்த வாரம் வரலாறு காணாத அளவிற்கு 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். இதனால் நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து 48 மணி நேரத்திற்கு பின்னர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சாமானிய பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்யும் விதமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்து இருந்தது.
பக்தர்களின் கூட்டம் குறையாததால் இம்மாத கடைசிவரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.