பள்ளத்தில் விழுந்த கார்- 4 பேர் பலி

மங்களூர், டிசம்பர் 28- புத்தூர் தாலுக்காவின் பர்லட்காவில் ஆல்டோ கார் பள்ளத்தில் விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சுல்யா தாலுகாவில் உள்ள ஜட்டிபல்லாவில் வசிப்பவர்கள்அண்ணு நாயக், சித்தானந்தா,
ரமேஷ் நாயக் ஆகியோர் பலியானார்கள் என்று தெரியவந்துள்ளது. கார் புத்தூர் புஞ்சைக்கு வந்து கொண்டிருந்தது.
இன்று அதிகாலை 4.15 மணியளவில் டிரைவர் திடீரென கண் அசந்த நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்ததும் புத்தூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.