பெங்களூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

பெங்களூர் : நவம்பர். 9 – டீ குடிக்கவென பேக்கரிக்கு வந்த பிரபல ரௌடி சஹதேவ் என்பவனை ஆயுதங்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் புட்டேனஹள்ளியின் சுஞ்சனக்கட்டா பிரதான வீதியில் நடந்துள்ளது. கோணனகுண்டே போலீஸ் நிலைய ரௌடி பட்டியலில் இருந்த ரௌடி சஹதேவ் நேற்று இரவு 9.30 மணியளவில் சுஞ்சனக்கட்டா பிரதானவீதியில் உள்ள பேக்கரி ஒன்றில் டீ குடிக்க சென்றபோது மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்த ஆறுபேர் இவனை திடீரென மனம் போன போக்கில் ஆயுதங்களால் தாக்கிவிட்டு கண நேரத்தில் தப்பியோடியுள்ளனர். இந்த தாக்குதலால் படு காயங்களடைந்த சஹதேவ் அதே இடத்தில் துடி துடித்து இறந்திருப்பதுடன் இது குறித்து தகவல் அறிந்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புட்டேனஹள்ளி போலீசார் மேற்பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை துவங்கியுள்ளனர். இந்த கொலையை தீவிரமாக கருதியுள்ள டி சி பி ராகுல் குமார் சஹபூரா குற்றவாளிகளை கைது செய்ய தனி படையை அமைத்து விசாரணையை முடுக்கியுள்ளார். இந்த படுகொலை சம்பவத்தில் பின்னணி என்ன முன்பகையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை துவக்கி உள்ளனர். படுகொலை செய்யப்பட்ட ரவுடிக்கு பல இடங்களில் தகராறு இருந்து வந்துள்ளது மேலும் இவர் அடிதடி மட்டுமல்லாமல் கட்டப்பஞ்சாயத்து மிரட்டல் போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு பல தரப்பில் எதிரிகள் உருவாகி இருந்தனர். எனவே இவருக்கு எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 3 மோட்டார் சைக்கிள்களில் ஆறு பேர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இவரை வெட்டி சாய்த்து உள்ளனர். கொலை செய்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் தப்பி சென்று உள்ளனர். இவர்கள் எந்த கும்பல் எதற்காக கொலை செய்தனர் இவர்கள் கூலிப்படையா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த படுகொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளத