பெங்களூர், ஜன. 10-
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் 2024 ம் ஆண்டில் 40.7 மில்லியன் பயணிகள் பயணித் துள்ளனர். இது ஒரு சாதனையின் மைல் கல்
இது கடந்தாண்டை காட்டிலும் 9.5 சதவீதம் அதிகம் என தெரிய வந்துள்ளது.
உலகளவில் பெரிய விமான நிலையங்களில் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய அதிகாரிகள், சர்வதேச விமான நிலையங்களின் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று
இந்த விமான நிலைய த்தில் பயணிகளின் எண்ணிக்கை விபரங் களை வெளியிட்டு இதனை வெளியிட்டது.
கடந்த 2023 ல் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் 37.2 மில்லியன் பயணிகள் பயணித்தனர்.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைக்கான விமானங்கள் அதிகரித்துள்ளது.
பண்டிகை கால பயணமாக 2024 அக்டோபர் 20 ல் 1.2 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தனர்.
தினமும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 723 பயணிகள் பயணம் செய்தனர்
கடந்த 2024ம் ஆண்டு இறுதி வரை 70 உள்நாட்டு விமானங்கள் , 30 சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டன.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் புதிய விமான நிறுவனங்களான விர்ஜின், அட்லாண்டிக் சலம் ஏர், மண்ட ஏர், ஃபிளை 91.
டொமெஸ்டிக் கேரியர் இண்டிகோ மட்டுமே வாரத்தில் 46 விமானங்களை அறிமுகப்படுத்தியது. 21.1 சதவீதம் சர்வதேச விமான வளர்ச்சிக்கு பயனளித்தது. இதில் கோடைக்காலத்தில் 3,700 இருக்கைகள் பயன் படுத்தப் பட்டது.
குளிர்காலத்தில் துபாய் சிங்கப்பூர் அபுதாபி தோஹா மற்றும் லண்டன் ஹெத்ரோ ஆகிய வைகளுக்கும், உள்நாட்டு சேவையில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே மாநிலங்களுக்கு இயக்கப் பட்டன.
கார்கோ விமான சேவையும் கடந்த 2024 வளர்ச்சி அடைந்துள்ளது 4,96,227 மெட்ரிக் டன் லக்கேஜ்களை ஏற்றி சென்றது. 2023 கணக்கிட்டால் அது 2024 ல் 17 சதவீதம் அதிகம். கடந்த 2023, ம் ஆண்டில் 13, 981 மெட்ரிக் டன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.