பெங்களூர் வெள்ளக்காடு

பெ ங்களூர்,செப்.5 கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் 8 ஆண்டுகளுக்கு பிறகு அதிகப்பட்ச மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ல் பெங்களூருவுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது 3 நாட்களும் நகரில் 6 முதல் 12 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தொடர் கனமழையால் பெங்களூரில் தாழ்வான பகுதிகள் வெள்ளக்கார மாறி உள்ளது இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது
பெங்களூரு மழை நேற்று இரவு பெய்த கனமழையால் தலைநகர் பெங்களூரு உண்மையில் ஸ்தம்பித்தது. பெங்களூரின் முக்கிய பகுதிகளில் நேற்று இரவு மேக வெடிப்பு போல் மூன்று மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 83 மி.மீ மழை பெய்துள்ளது, இது 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு நகரில் பெய்த அதிகபட்ச மழையாகும் என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழையால் தேங்கி கிடந்த ரெயின்போ டிரைவ் லேஅவுட்டில் மீண்டும் தண்ணீர் புகுந்துள்ளது. சர்ஜாபூர் சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ரெயின்போ டிரைவ் லேஅவுட் முன் உள்ள இரண்டு சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. சர்ஜாபூர் சாலையில் உள்ள விப்ரோ நிறுவனம் உள்ளிட்ட பகுதி முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. ரெயின்போ லேஅவுட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்து பேரழிவை உருவாக்குகிறது. திங்கட்கிழமை காலையும் கோரமங்களா சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெங்களூரில் பரவலாக கன மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாரத்தள்ளி அருகே உள்ள‌ சில்க் போர்டு சந்திப்பு அருகே உள்ள ஈகோ ஸ்பேஸ் அருகே உள்ள வெளிவட்டச்சாலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியது. நேற்றைய மழையால் மீண்டும் மழை வெள்ளம் தேங்கி உள்ளதால் சாலை முழுவதும் ஆறு போல் காட்சியளிக்கிறது.
வெளிவட்டச்சாலை அருகே பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாரத்தள்ளி அருகே சில்க் போர்டு சந்திப்பு பகுதியில் தண்ணீரில் ஒருவர் சிக்கிக் கொண்டதையடுத்து, உள்ளூர் காவலர்கள் தண்ணீரில் சிக்கிய நபரை மீட்டனர்.
பெங்களூரில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், உதவி தேவைப்படுபவர்கள் பெங்களூரு மாநகராட்சியின் உதவி எண்களையும் வழங்கியுள்ளது. 1533 என்ற இலவச எண்ணும் மழை உதவி எண்ணாக செயல்படும். பெங்களூரு மாநகராட்சியின் 24×7 உதவி எண் (2266 0000) மற்றும் வாட்ஸ்அப் உதவி எண் (94806 85700) உள்பட மண்டல உதவி எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மண்டல எஸ்சிக்களை தொடர்பு கொள்ள:
எலஹங்கா- விஜய குமார் ஹரிதாஸ்- 9480683059- vijaykumarharidas@gmail.com
2 .பொம்மனஹள்ளி- சசி குமார்- 9480685237 -sebombbmp@gmail.com
தாசர்ஹள்ளி -ஜே விஸ்வநாத்- 9480684039 -bbmpsedas@gmail.com
கிழக்கு -சுகுணா -9480683016 -bbmpseeast@gmail.com
மகாதேவ்புரா -பி எல் நாகராஜ் -9480685840 -sempura@bbmp.gov.in
ஆர்ஆர் நகர் -எச் பீமேஷ் 9379231908 -serrn.bbmp@gmail.com
தெற்கு -நரசாராம் ராவ் -9480683174 -sesouthbbmp@gmail.com
மேற்கு -சுயம் பிரபா -9480685321 -sebbmpwest123@gmail.com என்று உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது