போதை பொருள் பறிமுதல்

சென்னை: ஜூன் 27: நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு விமானதில் கடத்திவரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஷூக்களில் மறைத்து வைத்து 2.2 கிலோ கொக்கைனை கடத்தி வந்த, கென்யாவை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஷூக்களின் அடி பாகங்களில் ரகசிய அறை அமைத்து போதைப்பொருள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கென்யா நாட்டுப்பெண் வைத்திருந்த மேலும் 5 ஷூக்களிலும் போதைபொருள்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட கென்யா நாட்டுப் பெண், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என அந்த இளம்பெண்ணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆப்பிரிக்கா நாடுகளைல் இருந்து சென்னைக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.