லால்பாக் மலர் கண்காட்சி ஆரம்பம் வாகன நிறுத்துமிடங்கள் அறிவிப்பு

பெங்களூரு, ஆக. 4: புகழ்பெற்ற லால்பாக் மலர் கண்காட்சி இன்று மாலை தொடங்குகிறது
லால்பாக்கில் மலர்க் கண்காட்சி நடைபெறுவதையொட்டி, அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் 12 நாட்களுக்கு வாகன நிறுத்தம் செய்யவதற்கான‌ இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு லால்பாக்கில் சுதந்திர தினத்தையொட்டி மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சி இன்று முதல் தொடங்க உள்ளது இதனையடுத்து லால்பாக்கை சுற்றி உள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, வாகனங்களை நிறுத்த பெங்களூரு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
மலர் கண்காட்சியில் பல்வேறு வகையான மலர்கள் மட்டுமின்றி, பழங்களும் இடம் பெறுவது வாடிக்கை. இதனை காண‌ லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் பெங்களூரு போக்குவரத்து போலீசார் கவனமாக உள்ளனர். இதனையடுத்து லால்பாக்கிற்கு அருகே உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்த சில‌ முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
அதன்படி, டாக்டர் மரிகவுடா சாலை, லால்பாக் மெயின் கேட் முதல் நிம்ஹான்ஸ் வரை சாலையின் இருபுறமும், கே.எச்.சாலை, கே.எச்.சந்திப்பு முதல் சாந்திநகர் சந்திப்பு வரை இருபுறமும், பிஎம்டிசி சாலையின் இருபுறமும், குரும்பிகல் சாலையின் இருபுறமும், லால்பாக் மேற்கு கேட் முதல் ஆர்.வி. ஆசிரியர் கல்லூரி வரை, ஆர்.வி.ஆசிரியர் கல்லூரி முதல் அசோகா தூண் வரை, அசோக தூணிலிருந்து சித்தாபூர் சந்திப்பு வரை வாகனங்களை நிறுத்தம் செய்ய‌ தடை செய்யப்பட்டுள்ளது.
டாக்டர் மாரிகவுடா சாலை, அமீன் கல்லூரி வளாகத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். கே.எச்.சாலை, சாந்திநகர் பிஎம்டிசி பேருந்து நிலையம் அருகே நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். டாக்டர் மரிகௌடா சாலை முதல் ஹாப் காம்ஸ் சாலை வரை, ஜே.சி.சாலையில் உள்ள‌ மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.