விவசாய கடனை அடைத்த அமைச்சர்

லத்தூர்: ஜூலை 7-
மகா​ராஷ்டிர மாநிலம் மராத்​வாடா பகுதி லத்​தூர் மாவட்​டத்​தில் உள்ள ஹடோல்டி கிராமத்​தைச் சேர்ந்​தவர் அம்​ப​தாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்​கர் நிலம் உள்​ளது.
ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்​வதற்கு தேவை​யான எருதுகள் அல்​லது டிராக்​டரை வாங்க அவருக்கு வசதி இல்​லை. அவற்​றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்​ப​தால், தானே எரு​தாக மாறி அம்​ப​தாஸ் பவாரும் அவரது மனைவி முக்​தா​பா​யும் பல ஆண்​டு​களாக நிலத்தை ஒரு மரக்​கலப்பை மூலம் உழுது விவ​சா​யம் செய்து வரு​கின்​றனர். விவ​சாய கடனை கூட அடைக்க முடி​யாமல் மிக​வும் வறுமை​யில் வாடி வரு​கின்​றனர். இதையடுத்து மகா​ராஷ்டிர கூட்​டுறவுத் துறை அமைச்​சர் பாபா​சாகேப் பாட்​டில் கடந்த சனிக்​கிழமை அம்​ப​தாஸ் பவார் வீட்​டுக்கு நேரடி​யாக சென்​றார். மேலும், கூட்​டுறவு சொசைட்​டி​யில் பவார் பெயரில் இருந்த விவ​சாய கடன் ரூ.42,500-ஐ அமைச்​சர் பாட்​டில் முழு​மை​யாக செலுத்​தி​னார். அத்​துடன், கடன் பாக்கி இல்லை என்ற சான்​றிதழை உடனடி​யாக பவாருக்கு வழங்​கும்​படி​யும் உத்​தர​விட்​டார்.
முன்​ன​தாக கடந்த வெள்​ளிக்​கிழமை லத்​தூர் மாவட்ட ‘கிரந்​தி​காரி ஷேத்​கரி சங்​காதன்’ என்ற அமைப்பு நிலத்தை உழு​வதற்கு 2 மாடு​களை வாங்கி மேள தாளத்​துடன் பவார் வீட்​டுக்கு ஓட்​டிச் சென்​றனர். அங்கு மாடு​களை அவருக்கு பரி​சாக வழங்​கினர்.