வெடிகுண்டு மிரட்டல்

மும்பை, செப்டம்பர். 6 – மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. இதில் பேசிய நபர் காமாத்திபுரா 12-வது லைனில் உள்ள கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் உஷார் ஆன வெடிகுண்டு பிரிவு போலீசார் மோப்பநாயுடன் அங்கு விரைந்து சென்றனர். கட்டிடத்தில் தங்கி இருந்த அனைவரையும் வெளியேற்றினர். அங்கு நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதுகுறித்து நாக்பாடா போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை அமைத்தனர். மிரட்டல் விடுத்த நம்பரின் சிக்னலை வைத்து நடத்திய விசாரணையில் அந்த நபரின் அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.இதற்கான காரணம் குறித்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.