ஃபார்​முலா பாரத் 2026:கேம்​பர் ரேசிங் அணி சாம்பியன்

சென்னை, ஜன. 29- சென்னை காட்​டாங்​குளத்​தூர் எஸ்​ஆர்​எம் அறிவியல் மற்​றும் தொழில்​நுட்ப நிறு​வனத்​தின் மாணவர் அணி​யான ‘டீம் கேம்​பர் ரேசிங்’ கோவை​யில் நடை​பெற்ற ஃபார்​முலா பாரத் 2026 கார் பந்​தயப் போட்​டி​யில் ஒட்டுமொத்த சாம்​பியன் பட்​டத்தை வென்​றது. எஸ்​ஆர்​எம் மாணவர்​கள் வடிவ​மைத்த கார், தாங்​கு​திறன், ஸ்கிட்​பேட், ஆட்​டோகி​ராஸ், ஆக்​சிலரேஷன், பொறி​யியல் வடிவ​மைப்​பு, எரிபொருள் சிக்​க​னம் உட்பட அனைத்து பிரிவு​களி​லும் முதலிடம் பிடித்​தது. சிறந்த ஓட்​டுநருக்​கான விருதை​யும் கைப்​பற்​றியது. பல்​கலைக்​கழகத்​தின் பொறியியல் துறை​யின் டீன் லீனஸ் மார்ட்​டின், ஆட்டோமொபைல் துறைத் தலை​வர் கே.கமலக்​கண்​ணன் ஆகியோரின் கூட்டு வழி​காட்​டு​தலில் மாணவர்​கள் இந்த வெற்​றியை பதிவு செய்​துள்​ளனர்​.