அக்டோபர் 3ம் தேதியும் விடுமுறை? கோட்டைக்கு போன கடிதம்

சென்னை: செப். 26-
மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ஆரம்பமாகி உள்ளது.. அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் ஆயூத பூஜை, சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதில், அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 3ம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. நவராத்திரி விழா தொடங்கிவிட்ட நிலையில், அதன் நிறைவாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது நம்முடைய நாட்டில் வழக்கமாக உள்ளது.. அந்த வகையில், அக்டோபர் மாதம் 1ம் தேதி வியாழன் அன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. விஜயதசமி, காந்தி ஜெயந்தி அதேபோல அக்டோபர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜய தசமி (சரஸ்வதி பூஜை) மற்றும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதி என்பதாலும் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை மாணவர்களுக்கு கிடைக்க உள்ளது. அந்தவகையில், இதையடுத்து, நாளை 27ம் தேதி முதல் தொடர் விடுமுறை விடப்படுகிறது.. மற்றொருபுறம் மாணவர்களின் காலாண்டு விடுமுறையும் ஆரம்பமாகிவிட்டது. இதன்காரணமாக ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.. வார விடுமுறை ஆயுத பூஜை, விஜயதசமி, வார விடுமுறை, காலாண்டு விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவேதான் இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.