Home மாவட்டங்கள் பெங்களூர் அடுத்த வாரம் நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி

அடுத்த வாரம் நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: ஜூலை 3-
அடுத்த வாரம் நியூசிலாந்துக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். அப்போது இந்தியா- நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியப் பிரதமர் மோடி அடுத்த வாரம் நியூசிலாந்திற்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாகும்; மேலும் நியூசிலாந்தின் பொருளாதார செழிப்பிற்கு மிகவும் முக்கியமான நாடாகவும் அது திகழ்கிறது. ஏப்ரல் மாதம் கையெழுத்தான நியூசிலாந்து-இந்தியா இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவடைந்தது. இந்த ஒப்பந்தம் நியூசிலாந்திற்கு அதிக வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். இது 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய சந்தையில் ஏற்றுமதியை அதிகரிக்கப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்; இதன் மூலம் நியூசிலாந்து சமூகங்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதோடு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு ஊதியமும் உயரும். இவ்வாறு கிறிஸ்டோபர் லக்சன் கூறினார்.