அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.14,610 கோடி முதலீடு

மும்பை, நவ. 3- அன்​னிய முதலீட்​டாளர்​கள் தொடர்ந்து மூன்று மாதங்​களாக ரூ.77,000 கோடி மதிப்​பிலான முதலீட்டை இந்​திய பங்​குச் சந்​தையி​லிருந்து திரும்ப பெற்ற நிலை​யில், கடந்த அக்​டோபரில் ரூ.14,610 கோடியை அவர்​கள் முதலீடு செய்​துள்​ளனர். பாரின் போர்ட்​போலியோ இன்​வெஸ்​டார் (எப்​பிஐ) எனும் அன்​னிய முதலீட்​டாளர்​கள் பல்​வேறு காரணங்​களால் இந்​திய பங்​குச் சந்​தை​யில் இருந்து கடந்த மூன்று மாதங்​களாக கணிச​மான அளவில் முதலீட்டை திரும்ப பெற்​றனர். அதன்​படி, ஜூலை​யில் ரூ.17,700 கோடி, ஆகஸ்​டில் ரூ.34,990 கோடி, செப்​டம்​பரில் ரூ.23,885 கோடி என ரூ.77,000 கோடி மதிப்​பிலான தொகையை எப்​பிஐ வெளியே எடுத்​தனர். இந்த நிலை​யில், கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் செயல்​பாடு ஊக்​கம்​பெற்று வரு​வாய் அதி​கரிப்பு,
அமெரிக்க மத்​திய வங்கி வட்டி விகித குறைப்பு எதிர்​பார்ப்பு மற்​றும் அமெரிக்​கா-இந்​தியா இடையே வர்த்தக பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​படிக்கை கையெழுத்​தாகும் என்ற நம்​பிக்கை ஆகியவை வெளி​நாட்டு முதலீட்​டாளர்​களின் கவனத்தை ஈர்த்​துள்​ளது.