அபாய நிலையை எட்டிய டெல்லி காற்று மாசு

டெல்லி: நவம்பர் 25-
காற்று மாசு பிரச்சனை தலைநகர் டெல்லியை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் வருகிறது. மறுபக்கம் மாசு அதிகரிப்பால் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. காற்று மாசு தொடர்பாக பிரதமர் அலுவலகம் அவசர ஆலோசனை நடத்தியுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் அலுவலகங்களிலும், மீதி பேர் வீடுகளில் இருந்தும் பணியாற்ற அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சனை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. டெல்லி முழுவதும் புகைமூட்டமாக இருப்பதால் மக்கள் மூச்சு விடுவதற்கு சிரமப்படுகிறார்கள். ஊர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. காற்றின் தரக்குறியீடு 350ஐ தாண்டியுள்ளது. இதனால் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு பிரச்சனையால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி காற்று மாசு போராட்டம் இதற்கு எதிராக மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தை காவல்துறை தடியடி நடத்தி தான் கலைத்தனர். காவல்துறை மீது பெப்பர் ஸ்ப்ரே வீசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நக்சலைட்ஸ், மாவோயிஸ்ட் இயக்கங்களுக்கு ஆதரவாக கோஷம் போட்டதாக புகார் எழுந்துள்ளது. காற்று மாசு பிரச்சனையில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி காற்று தரநிர்ணய மேலாண்மை ஆணையம் பரிந்துரைப்படி, காற்று மாசு அதிகமாக இருக்கும்போது பள்ளி குழந்தைகளை மைதானங்களில் விளையாட அனுமதிக்க கூடாது, பீக் ஹவர்ஸ்களில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்திலும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் காற்று மாசு குறைப்பது தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அலுவலக நேர மாற்றங்கள் டெல்லியில் பதிவு செய்யப்பட்ட 2.97 கோடி வாகனங்களில் 37 சதவீதம் அதிக வாயுவை உமிழும் பழைய வாகனங்களே இயங்கி வருகின்றன. எனவே மக்கள் அதிகளவு மின்சார வாகனங்களை பயன்படுத்த முன்வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வாகன பயன்பாடு தொடர்பாக அங்கு பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அலுவலக நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீதம் ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.மருத்துவமனை, தீயணைப்பு, குடிநீர் விநியோகம், மின்சாரம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அரசுத்துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு கூறியுள்ளது.