Home விளையாட்டு அமத் டயாலோவின் கடைசி நிமிட கோலால் ஐவரி கோஸ்ட் வெற்றி

அமத் டயாலோவின் கடைசி நிமிட கோலால் ஐவரி கோஸ்ட் வெற்றி

பிலடெல்பியா, ஜூன் 16- பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் அமெரிக்​கா​வின் பிலடெல்​பியா நகரில் உள்ள லிங்​கன் ஃபைனான்​சி​யல் ஃபீல்டு மைதானத்​தில் நேற்று ‘இ’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஐவரி கோஸ்ட் – ஈக்வேடார் அணி​கள் மோதின. போட்​டி​யின் முதல் பாதி ஆட்​டம் ரசிகர்​களுக்கு அசாத்​தி​ய​மான விருந்​தாக அமைந்​தது. முதலில் ஈக்​வ​டார் அணி​யின் ஜான் எபோவா பெனால்டி பாக்​ஸிற்கு வெளியி​லிருந்து அடித்த அதிவேக ஷாட், துர​திர்​ஷ்ட​வச​மாக கோல்​கம்​பத்​தின் மேல் பட்டு திரும்பியது. அதைத் தொடர்ந்து அந்த அணி​யின் பெட்ரோ விதே கொடுத்த துல்​லிய​மான பாஸைப் பெற்ற ஆலன் மிண்​டா​விற்கு கோல் அடிக்க பொன்​னான வாய்ப்பு கிடைத்​தது. கோல்​கீப்​பர் யாஹியா ஃபொஃ​பா​னாவை தாண்டி அவர் வளைத்து அடித்த ஷாட்​டும் கோல்​கம்​பத்​தில் பட்டு ஏமாற்​றம் அளித்​தது. தொடர்ந்து ஐவரி கோஸ்ட் அணி​யின் யான் தியோமண்டே வலது பக்​க​வாட்​டில் மின்​னல் வேகத்​தில் புகுந்து தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்​படுத்​தி​னார். அதே​போல் அந்த அணி​யின் வீரர் பாசூமனா துரே அடித்த தாழ்​வான ஷாட்டை ஈக்​வ​டார் கோல் கீப்பர் ஹெர்​னான் கலின்​டெஸ் விரல் நுனி​யால் தடுத்​துக் காப்​பாற்​றி​னார்.