சென்னை: டிச. 26: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகம் வருகை திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவர் நாளை, சென்னை வந்து, மறுநாள் ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை மாவட்டம் செல்ல இருந்தார். அங்கு, பா.ஜ., மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்க இருப்பதாக, தகவல் வெளியானது. இந்நிலையில்,
வங்கக் கடலில் தமிழகத்தை ஒட்டி, காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், வட மாவட்டங்களில் மேக மூட்டம் காணப்படுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர் இயக்க முடியாது எனவே, நாளை தமிழகம் வர இருந்த, அமித் ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டு, ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது..