
கொடகு, ஏப்ரல் 22 –
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுக்காவின் குட்டா கிராமத்தில் உள்ள ஒரு தங்கம் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த அப்பெண், ஏப்ரல் 19 அன்று தேவி வில்லா என்ற ஹோம்ஸ்டேயில் தங்கியிருந்தபோது, ஜார்க்கண்டைச் சேர்ந்த விருஜேஷ் குமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக குட்டா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கி, குற்றம் சாட்டப்பட்ட விருஜேஷ் குமாரைக் கைது செய்தனர்.இதே வழக்கில் ஹோம்ஸ்டே உரிமையாளர் விஷால் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.


















